கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து 2 மருத்துவர்கள் பலி நடந்தது என்ன முழு விவரம்
கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து 2 மருத்துவர்கள் பலி நடந்தது என்ன முழு விவரம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள் அத்வைது (வயது 28), அஜ்மல் (28) மற்றும் அவர்களது நண்பர்கள் மருத்துவ மாணவி, செவிலியர் உட்பட 5 பேரும் கொச்சியில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் காரில் எர்ணாகுளம் திரும்பியுள்ளார்கள்
கொச்சியில் இருந்து எர்ணாகுளம் வரும் வழியில் மேலும் அங்கு கனமழை பெய்ததால் பாதை தெரியாததால் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி வழிகளைப் பின்பற்றி பயணித்தனர்.
கார் வேகமாக இயக்கப்பட்டது எர்ணாகுளம் கோதுருத் கடல்வத்துருத்தியில் கொடூங்காடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது வழி தெரியாமல் அந்தப் பகுதியில் உள்ள ஆற்றில் கார் கவிழ்ந்ததுஆற்று நீர் அதிகமாக சென்றிருந்த நிலையில் கார் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் கார் ஆற்றில் மூழ்கியது. அப்போது பலத்த நீரோட்டமும் ஏற்பட்டது. பாதகமான சூழ்நிலையை பொருட்படுத்தாமல், உள்ளூர்வாசிகளும் தீயணைப்பு படையினரும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்,
அதில் இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கபட்டுள்ளார்கள்
இறந்தவர்கள் கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அத்வைத் மற்றும் அஜ்மல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரில் இருந்து மருத்துவ மாணவி, செவிலியர் உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூகுள் மேப் பார்த்து காரின் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளதாகவும் இதனால், வழி மாறி சென்று இருக்கலாம் எனவும் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கூறினர்.
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ