Breaking News

BREAKING அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
BREAKING அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து  தோழமை கட்சியை விமர்சித்து தன்னை முன்னிலைப்படுத்துவதை செய்து வருகிறார். இனி அவர் அப்படி பேசினால் அண்ணாமலையை பற்றி தாறுமாறாக அதிமுகவினர் விமர்சிப்பார்கள். 

அவர் ஒரு கருத்து கூறினால், இங்கு ஓராயிரம் கருத்துக்கள் வரும்.
ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை இப்படி செய்கிறார்

அதிமுக கூட்டணியில் இருக்க தான் பாஜகவினர் விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையில் இருந்துகொண்டு எங்களையே அண்ணாமலை விமர்சிக்கிறார்.அதிமுக இல்லாமல் பாஜக இங்கே கால் ஊன்ற முடியாது.

எங்களை வைத்து தான் உங்களுக்கு அடையாளம். எங்கள் தலைமையில் கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்ய கூடாது. 

ஆதலால், இப்போதைக்கு அதிமுக – பாஜக கூட்டணி கிடையாது. தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்கிறோம் என கூறி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback