பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மரணமடைந்தார்
பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று மரணமடைந்தார்
இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 98.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11.20 மணி அளவில் அவர் உயிர் இழந்துள்ளார். அதே இல்லத்ததில் சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கும்பகோணம் டாக்டர் எம்.கே.சாம்பசிவம்-பார்வதிதங்கம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த எம்.எஸ். சுவாமிநாதன், விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், வேளாண் அறிவியல் மற்றும் மரபியல் படிப்பை முடித்தவர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
எம்.எஸ். சுவாமிநாதன் 3 பத்மவிபூஷண் விருது, எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ஆசியாவின் நோபல் விருதான மகசேசே விருது, உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளையும், உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கியுள்ளன.