டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி தரப்படும் - ஏசிடிசி நிறுவனம் அறிவிப்பு
இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள், ரசிகைகள் வருகை தந்திருந்தார்கள்
இசை நிகழ்ச்சி:-
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மோசமான ஏற்பாடு:-
இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்யப்பட்டன.
25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ரசிகர்கள் இசைக்கச்சேரியில் நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாமல் பல மணி நேரம் காத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது .
5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை என்றும் கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.
இது மோசமான கான்செர்ட் எனவும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.
ஏ,ஆர், ரஹ்மான்:-
இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, "அன்புள்ள சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் குறைகளை எங்கள் குழு விரைவில் நிவர்த்தி செய்யும் " என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு முன்பு இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பியதற்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் சிஇஓ ஹேமந்த் ராஜா, இன்று வெளியிட்டுள்ள வீடியோவில்
இசை நிகழ்ச்சியில் சில அசவுகரியங்கள் நடந்துள்ளன. டிக்கெட் வாங்கியும் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ரஹ்மான் சாரின் இசையை கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.
இந்த நிகழ்ச்சியில் நடந்த அசவுகரியங்களுக்கு எங்கள் ஏசிடிசி நிறுவனமே முழு பொறுப்பு. இதில் ரஹ்மானின் பங்கு மேடையில் இசை நிகழ்ச்சியை நடத்தியது மட்டுமே . அதை அவர் மிகச் சிறப்பாகவே செய்து இருந்தார். அ
வருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடந்த அசௌகரியங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் அவரை மையப்படுத்தி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம். டிக்கெட் வாங்கி உள்ளே நுழைய முடியாதவர்களுக்கான டிக்கெட் தொகை கண்டிப்பாக திருப்பி வழங்கப்படும். அது 500 ரூபாயாக இருந்தாலும் செய்து சரி , ஐம்பதாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்