வேகமாய் பரவும் மெட்ராஸ் – ஐ மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
வேகமாய் பரவும் மெட்ராஸ் – ஐ மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சேனை எழும்பூர் மருத்துவமனையில் 240 பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு ‘மெட்ராஸ்-ஐ’ நோய் ஏற்பட்டால் குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் நிலை உள்ளது. கண்வலி ஏற்பட்டால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மேலும், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் 10 நாட்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்ய உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்