Breaking News

லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலி - பரபரப்பு சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு.

சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.2 பேர் படுகாயம் அடைந்தனர் 

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அ

இந்த விபத்து குறித்து சங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/manickamjayatv/status/1699284909624582204

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback