ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்த 149 பயணிகள் கடத்தி வந்த ₹14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
ஓமன் நாட்டிலிருந்து விமானத்தில், சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை, தங்கம் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில், சுங்கத்துறையினர் பிடித்து வைத்து, பல மணி நேரமாக விசாரணை செய்து வருகின்றார்கள்.
ஓமன் நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்த 156 பேரில், 149 பேர் கடத்தல் காரர்கள் என்ற எதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு அதிகாலை ஓமனில் இருந்து வந்த விமானத்தை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள்அந்த விமானத்தில் இருந்த மொத்தம் 156 பயணிகளில் 149 பேர் குருவிகள் என தெரிய வந்தது சுங்கத்துறை அதிகாரிகளையே அதிர்ச்சியடைய செய்தது
மேலும் 149 பேர் இடமும் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 14 கோடி மதிப்பிலான பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது இதில் 13 கிலோ தங்கம் 2500 க்கும் மேற்பட்ட புது மொபைல் போன்கள் மற்றும் குங்குமப்பூ உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது
ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து முழுமையாக சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடந்த விசாரணையில், பெரிய அளவில் தங்கம் கடத்தப்பட்டதாக, சுங்கத் துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Tags: தமிழக செய்திகள்