Breaking News

கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்த் !144 தடை உத்தரவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடைபெறவுள்ள நிலையில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. 

அதன்படி பெங்களூரில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊர்வலம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பந்த் என்ற பெயரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் பந்த் நடத்துபவர்களே பொறுப்பு என்று அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் நாளை பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு அடைப்பு நடைபெற்றாலும், நாளை அரசு பேருந்து ஓட்டுனர்கள் , நடத்துனர்கள் வேலைக்கு வரவேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. நாளை பெங்களூருவில் 4 பேருக்கு அதிகமாக மக்கள் கூடக்கூடாது. பேரணி ஆகியவற்றை நடத்தக்கூடாது என்றும் பெங்களூரு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ஆம் தேதி 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 

இது சம்மந்தமாக கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளுர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கபடா வண்ணம் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயர்அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் இதர இருமாநிலங்களுக்கு இடையேயான சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ள தொடர்பு அலுவலகமாக கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் தெடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 9498170430, 9498215407. அறிவித்துள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback