Breaking News

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 1000 ரூபாய் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு kalaignar magalir urimai scheme online apply

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளில் ரூ.1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ம் தேதி முதல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள்  18ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இ-சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் 

நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தியாக அனுப்பபப்டும் என்றும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback