Breaking News

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது



கடந்த 2022  ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இந்த விவகாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்மானங்கள் குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பன்னீர்செல்வம் ,மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயா்நீதிமன்றம்  நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் முகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது 

அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது

மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback