Breaking News

புதுச்சேரியில் சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு..! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

 


சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது 

மேலும் மஞ்சள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் சமையல் எரிவாயுவின் விலை ரூ.200/- குறைக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback