சென்னையில் கட்டுக்கட்டாக ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல்- முன்னாள் ராணுவ வீரர், வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது
500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளரையும் கைது செய்யப்ப்ட்டுள்ளார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.45.2 லட்சம் மதிப்பிலான போலி ரூ.500 நோட்டுகள் மற்றும் கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் அவற்றை மாற்ற முயன்ற 2 பேர் அச்சிட்ட ஒருவர் என 3 பேர் கைது
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த மணி என்பவர், வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் எதிரில் காய்கறி கடை நடத்திவருகிறார். அந்த கடையில் வயதான ஒருவர் ரூ.670க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கிவிட்டு 2 புதிய ரூ.500 நோட்டுகளை கொடுத்துள்ளார். கடையில் இந்த ரூபாய் நோட்டுகள் சற்று வழுவழுப்பாக இருப்பதை பார்த்த, உரிமையாளர் அது கள்ள ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது.
கள்ள நோட்டுகளை கொடுத்த முதிவரை பிடித்து வைத்துக்கொண்டு அவரை சோதனை செய்தனர். அவரிடம் மேலும் இரண்டு ரூ.500 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்..
விசாரணையில் பிடிபட்ட நபர், பள்ளிக்கரணை பாலாஜி நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரியவந்தது. இவரும் இவரது நண்பர் சுப்பிரமணியனும் சேர்ந்து பிரிண்டிங் மற்றும் கட்டிங் இயந்திரங்களை வைத்து மேற்படி 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்தது தெரியவந்தது.
அதன்படி, போலீசார் விருகம்பாக்கம் பகுதிக்கு சென்று சுப்பிரமணியன் வீட்டில் அதிரடியாக சோதனை செய்த போது, கட்டுக்கட்டாக 90 கட்டுகள் கொண்ட ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும், வீட்டின் ரகசிய அறையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க வைத்திருந்த ஜெராக்ஸ் இயந்திரம், கட்டிங் மெஷின், பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர், நுங்கம்பாக்கம் போலீசார் கள்ளநோட்டுகளை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை மற்றும் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளநோட்டுகளை தயாரித்த சுப்பிரமணியன் மற்றும் அண்ணாமலையை கைது செய்தனர். அவர்களிடமிருந்து .45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பிரிண்டிங் இயந்திரம், பேப்பர் கட்டிங் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறுகையில்,
கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை. இதன் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.விசாரணை முடிந்த பிறகு தான் முழுமையாக விவரங்கள் தெரியவரும். கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளரையும் கைது செய்துள்ளார்கள்.
பொதுமக்களுக்கு சென்னை மாநகர காவல்துறை விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், கள்ள நோட்டுகள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.இவ்வாறு துணை கமிஷனர் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்