Breaking News

நம்பரை சேமிக்காமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி எளிதான 5 வழிமுறைகள் how to message on whatsapp without saving number tamil

அட்மின் மீடியா
0
உலகமெங்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்ஆப் தான். எதற்கெடுத்தாலும் வாட்ஸ்ஆப் என்று வாட்ஸப் இல்லாதவர்களே இல்லை என்று என கூறலாம். 



மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து நீங்கள் யாருக்கேனும் மெசேஜ் அனுப்ப விரும்பினால் முதலில் அந்த நபரின் எண்ணை நீங்கள் சேவ் செய்ய வேண்டும். நம்பரை சேவ் செய்யாமலே ஒருவருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசஜ் அனுப்ப முடியாது  என்றே பலரும் நினைக்கின்றார்கள்

ஆனால் ஒருவர் நம்பரை சேவ் செய்யாமலே வாட்ஸ் அப் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி..! என்பதை பார்ப்போம்

வழி முறை 1:-
  • முதலில் உங்கள் மொபைலில் ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.
  • அதில் https://wa.me/ NUMBER   நம்பர் என்று இருக்கும் இடத்தில் யாருக்கு மெசஜ் அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது நம்பரை டைப் செய்யவும். உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் https://wa.me/919990012345 என்று டைப் செய்யவும்
  • அடுத்து இப்போது எண்டர் அழுத்தவும்
  • அடுத்து உங்கள் ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.
  • அடுத்ததாக  வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும். அவ்வளவுதான் நீங்கள் உங்கள் மெசஜை தொடரலாம் 
வழி முறை 2:-

கீழ் உள்ள ஆப்பை பிளே ஸ்டோரில் சென்று இன்ஸ்டால் செய்யுங்க அதனை ஓப்பன் செய்து அதில் யாருக்கு மெசஜ் அனுப்பவேண்டுமோ அந்த நம்பரை மட்டும் டைப் செய்து ஓக்கே கொடுங்க  வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புங்க அவ்வளவுதான் ரொம்ப ஈசியாக இருக்கும்

ஆப் இன்ஸ்டால் செய்ய:-

வழி முறை 3:-

உங்கள் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்யுங்கள்

அடுத்து நியூ சாட் பட்டனை ஓபன் செய்ய வேண்டும்

அதில் சேர்ச் ஆப்ஷனில் (லென்ஸ் வடிவில் உள்ள பட்டன்) பயனர்கள் தாங்கள் சாட் செய்ய விரும்பும் எண்ணை உள்ளிட வேண்டும்

பின்னர் அந்த எண்ணுக்கு பக்கத்தில் சாட் என ஆப்ஷன் வரும். அதன் மூலம் அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்

வழிமுறை 4:-

உங்கள் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்யுங்கள்

அடுத்து அதில் உங்கள் காண்டாக்ட் லிஸ்ட் ஓப்பன் செய்யுங்கள்

அதன்பின்பு அதில் முதலில் உங்கள் மொபைல் எண் இருக்கும்அதனை ஓப்பன் செய்யுங்கள் 

அதன் பின்பு அதில் நீங்கள் யாருக்கு சாட் செய்ய விரும்பும் எண்ணை பதிவிட்டு எண்டர் கொடுங்கள்

அடுத்து  அந்த எண்ணை கிளிக் செய்தால் அந்த எண்ணுக்கு வாட்ஸ்ப்பில் மெசெஜ் அனுப்ப வேண்டுமா என கேட்கும் ஆம் என்பதை செலக்ட் செய்து அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்

வழிமுறை 5:-

நீங்கள் உங்கள் ட்ரூகாலர் ஆப் மூலமாகவும் வாட்ஸப் மெசஜ் அனுப்பலாம்

முதலில் ட்ரூகாலர் ஆப் ஓப்பன் செய்யுங்கள்

அடுத்து அதில் சர்ச் என்பதில் நீங்கள் யாருக்கு சாட் செய்ய விரும்பும் எண்ணை பதிவிட்டு எண்டர் கொடுங்கள்

அடுத்து கீழே வாட்ஸப் இருக்கும் அதனை கிளிக் செய்தால் நீங்கள் அந்த எண்ணிற்க்கு மெசஜ் செய்யலாம்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback