3 நாட்களாக ரயில் கழிவறையில் பயணம் செய்த வட மாநில இளைஞர் ஏன் தெரியுமா
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து சென்னை அரக்கோணம் வழியாக கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லக்கூடிய அதிவிரைவு ரயிலானது கடந்த இருதினங்களுக்கு முன்பு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன் பதிவு செய்யப்பட்ட S2 பெட்டியில் கழிவறை
மூன்று நாட்களாக உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் யாராவது இயற்கை உபாதை கழிக்க செல்லும் போதெல்லாம் அந்த கழிவறை பூட்டியே கிடந்துள்ளது யாராவது சென்று இருப்பார்கள் என பயணிகள் நினைத்துள்ளனர். இந்நிலையில் அப்பெட்டியில் பயணம் செய்த பயணிகள் ரயில்வே துறைக்கு புகார் கொடுத்தனர்.
புகாரைத் தொடர்ந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ரயில்வே காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சென்று கழிவறையினை உடைத்து திற்ந்தபோது டிக்கெட் எதுவும் எடுக்காமல் ஸ்லீப்பர் பெட்டியின் கழிவறையில் 3 நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த நபர் பயணம் செய்துள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் ஜார்க்கண்டை சேர்ந்த சோபன் தாஸ் (18) என்பது தெரியவந்துள்ளது.அந்த இளைஞரிடம் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்