தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஆக.26 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து நாளை ஆக.27 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 28 முதல் செப். 1 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 26 வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதே போல ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தேதிகளில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்