Breaking News

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்.. முழு விவரம் tneb tariff details

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது..


தமிழகத்தில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வு அடைந்ததால், மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதனை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்து இருப்பதால், ஜூலை 1  முதல் கட்டணம் உயர வாய்ப்புள்ளது கடந்த ஆண்டில் மின் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2027 ஆண்டு வரை ஆண்டுதோறும் பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்தாண்டு ஏப்., மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியானது ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்தும் முடிவை, மின்வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார் 

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளிவரும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது. 

அதன்படி, யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback