Breaking News

நடு ரோட்டில் மணிப்பூரில் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மை என்ன? manipur woman shot dead on road

அட்மின் மீடியா
0

நடு ரோட்டில் மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மை என்ன? 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மணிப்பூரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் விலை மதிப்பற்ற மனித உயிர் பறிக்கபடுகின்றது. இனக்கலவரம் மணிப்பூரில் அதிதீவிரம் அடைந்தது வருகின்றது. மத்திய அரசு இக்கலவரத்தை வேடிக்கை பார்பது ஏன்? இதை தடுக்கும் பொறுப்பு யாருடையது? இன்று மணிப்பூர் நாளை நமது மாநிலமாக கூட இருக்கலாம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.  

 


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவரை கையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் சாலையின் நடுவே முட்டி போட சொல்கின்றனர். கடைசியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது  

அந்த செய்தி பொய்யானது  

யாரும் நம்பவேண்டாம்  

அப்படியானால் உண்மை என்ன?  

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மணிப்பூரில் நடந்து இல்லை எனவும் அது மியான்மரில் நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது   

முழு விவரம்:-  

மணிப்பூர் வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் தலை நகரம் இம்பால் ஆகும். மணிப்பூர் வடக்கில் நாகலாந்து ,தெற்க்கில் மிஸோரம், மேற்க்கில் அஸ்ஸாம் கிழக்கில் மியன்மாருக்கு நடுவில் உள்ளது   மணிப்பூரை பொறுத்தவரையில் அங்கு எண்ணிக்கையின் அளவில் மிக பெரிய சமூகமாக இருப்பது மைத்தி சமூகம் இவர்கள் மணிப்பூரி என்றழைக்கப்படும் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர்.    பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர்  1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பின்பு 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.  மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளது,தற்போது பாஜக ஆட்சி நடைபெற்றுவருகின்றது     

பிரச்சனை:-     

மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தினரை சேர்க்க இணைக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை  அதே சமயம் மைத்தி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றார்கள்  இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மைத்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  

இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகின்றது   பழங்குடிகளுக்கும் - மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் நகரமே தீப்பிடித்து எரிந்தது.  இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   மணிப்பூர் அரசும் மாநிலத்தில் நிலையை கட்டுப்படுத்த இணைய வசதியை நிறுத்திyஉள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப் பிரிவும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்  

பொய் செய்தி:-  

இந்நிலையில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பெண்ணின் பெயர் ஏய் மார் துன் அவருக்கு வயது 24 ஆகும்.   பர்மா நாட்டில் உள்ள மியான்மரில் சாகாயிங் பிராந்தியத்தின் தாமு டவுன்ஷிப்பில் வசிப்பவர் ஆவார் மேலும் அவர் ஓர் ஆசிரியராக பணிபுரிகின்றார்   

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் மியான்மர் நாட்டின் மக்கள் பாதுகாப்புப் படையின் (PDF) போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொன்றனர் என செய்தி வெளியாகி உள்ளது   

சந்தேகத்தின் பேரில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது பல PDF உறுப்பினர்களைக் கைது செய்ய வழிவகுத்தது. மேலும், பெண்ணைக் கொன்றது நிரூபிக்கப்பட்டால், PDF உறுப்பினர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முடிவு:-  

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்  

அட்மின் மீடியாவின் ஆதாரம்   

https://www.ludunwayoo.com/news-mm/2022/12/04/61434/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback