Breaking News

மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்து துணை முதல்வர் ஆனார் அஜித் பவார்

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்த சூழலில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே, முதல்வராகவும், துணை முதல்வராக  தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். 



இந்நிலையில் மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சித்தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ க்களுடன் சேர்ந்து அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்து மாநிலத்தின் துணை முதலமைச்சரானார். அதுமட்டுமின்றி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.ஏற்கனவே பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் தம்பி மகனான அஜித் பவார் தற்போது கட்சியை இரண்டாக பிரித்துள்ளார். இந்த சூழல் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாகியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback