Breaking News

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்..! இளைஞர் காலை கழுவிய முதல்வர் சிவராஜ் சிங்..! வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா, பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறையினர் பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். அதன்பின் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருடைய கால்களை கழுவி மரியாதை செலுத்தியுள்ளார். 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ANI/status/1676820004296327169

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback