காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண் முழு விவரம் Seema Ghulam Haider
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் நொய்டாவைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துவிட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து
![]() |
புகைப்படம் உதவி www.hindustantimes.com |
கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது வாலிபருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற 30 வயது பெண்ணுக்கும் பப்ஜி விளையாடிய போது காதல் மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள்
சீமாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் குலாம் ஹைதர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் சீமா தனது கணவரை பிரிந்து சச்சினுடன் வாழ முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது 4 குழந்தைகளுடன் நோபளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து நொய்டாவை அடைந்துள்ளார்.
இருவரும், நான்கு குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வாடகைக்கு குடியிருப்பில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.
பாகிஸ்தான் பெண் ஒருவர் சட்டவிரோதமாக வசித்து வருவதாக உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து, சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சினை பொலிஸார் கைது செய்தனர்.
விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக சீமா ஹைதரை கடந்த ஜூலை 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். சீமா தனது ஏழு வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளுடன், சச்சின் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இருவரும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா பகுதியில் உள்ள வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வந்தனர்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமா நான் இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். என்னுடைய பெயரையும் சீமா ஹைதர் என்பதை சீமா சச்சின் என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளேன். என்பிள்ளைகளுக்கும் ராஜ், பிரியங்கா,பாரி, முன்னி என பெயரிட்டுள்ளோம்.
தற்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். விரைவில் சட்டப்பூர்வமாக இந்து முறைப்படி கங்கா ஸ்நானம் செய்து திருமணம் செய்து கொள்வோம் என்றார்
இதற்க்கிடையில் சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர் வீடியோ ஒன்றின் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். அந்த வீடியோவில்
எனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் பழகி அவரை இந்தியாவுக்கு அந்த நபர் வரவழைத்துள்ளார். எனது மனைவி, குழந்தைகளை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்