Breaking News

தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கு 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்... ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி! Tabrez Ansari

அட்மின் மீடியா
0
மோட்டார் சைக்கிள் திருட முயன்றதாகக் கூறி தப்ரேஸ் அன்சாரியை ஜெய்ஸ்ரீராம், என கூறுமாறு என கூறி ஒரு கும்பல் அடித்தேக் கொன்றது.



ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரேஸ் அன்சாரி. இவர் கடந்த ஜூன் 18-ம் தேதி ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஓர் வீட்டில் பைக் திருட வந்தார் என திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஜெய்ஸ்ரீராம், என கூறுமாறு கடுமையாக தாக்கப்பட்டார் தப்ரஸ் அன்சாரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தப்ரஸ் அன்சாரிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

இதில் தொடர்புடைய 13 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தப்ரஸ் அன்சாரி படுகொலை வழக்கில் 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஜார்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் மண்டல், பீம் சிங் முண்டா, கமல் மஹதோ, மதன் நாயக், அதுல் மஹாலி, சுனாமோ பிரதான், விக்ரம் மண்டல், சாமு நாயக், பிரேம் சந்த் மஹாலி மற்றும் மகேஷ் மஹாலி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங் காவல் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback