ஒடிசா ரயில் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சி! Video from inside Coromandel Express
ஒடிசா ரயில் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சி!
ஒடிசா ரயில் விபத்திற்கு சில வினாடிகளுக்கு முன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில் இருந்த பயணியால் எடுக்கப்பட்ட வீடியோ என வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2 ஆம் தேதி இரவு ஒடிசாவில் பெங்களூர் - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் -
சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் என 3
ரயில்கள் மோதி விபத்திற்குள்ளாகின.மூன்று ரயில்கள் மோதி
விபத்திற்குள்ளானதில் 288 பயணிகள் உயிரிழந்தனர்.இந்நிலையில்
தற்போது வைரல் ஆகும் வீடியோவில்:-
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் பயணிகளில் பலர் தூங்கிக்கொண்டிருக்கின்றனர் அப்போது துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஏசி பெட்டியின் தரையைத் துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென ரெயில் பெட்டி குலுங்குவதும், பயணிகள் அலறும் சத்தமும், வீடியோ எடுத்த கேமரா குலுங்குவதும் அந்த வீடியோவில் உள்ளது பலரும் ஷேர் செய்யும் அந்த இந்த வீடியோ விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுக்க்ப்பட்டது என கூறப்படுகின்றது ஆனால் அந்த வீடியோவின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்படவில்லை.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ