நிர்வாணம் என்பதும் ஆபாசம் என்பதும் ஒன்றல்ல இரண்டும் வேறு ரஹானா பாத்திமா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Rehana Fathima Kerala High Court
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான ரஹானா பாத்திமா கடந்த 2020 ம் ஆண்டு தனது இரண்டு மைனர் குழந்தைகளை தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய அனுமதித்துள்ளார்.அதனை வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை பாடி ஆர்ட் பாலிடிக்ஸ் என்று சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்தார்
அந்த வீடியோ அபோது மிகவும் சர்ச்சையானது மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக இருந்தது தவறு எனபலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்
அதனை தொடர்ந்து காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் ரஹானா பாத்திமா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் அதன் பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரஹானா பாத்திமா கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் நிர்வாணம் மற்றும் ஆபாசம் இரண்டு ஒரே பொருள் உடையதாக எப்போதும் இருந்ததில்லை என்றார்.பெண்களின் ஆடையில்லாத உடலை எல்லா நேரத்திலும் ஆபாசமாகப் பார்க்க முடியாது எனக் கூறியதுடன் ரஹானா பாத்திமா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
குழந்தையை ஓவியம் வரைவதற்காக மட்டுமே தாய் அனுமதித்தார்.தன் உடலைப் பற்றி முடிவெடுக்கும் அடிப்படை உரிமை ஒரு பெண்ணுக்குத்தான் உள்ளது.
நிர்வாணமான பெண்ணின் உடலென்பது சிற்றின்ப நோக்கங்களுக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. உண்மையில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் நிர்வாண உடலின் மேல் ஓவியம் வரைவது வெளிப்படையான பாலியல் செயல் என்று கூற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்