Breaking News

செல்லப்பிராணிகள் வளர்ப்போர் (pet license) உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஆன்லைன் வழி (Online) உரிமம் வழங்கும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்



சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்,பூனை, செல்லப்பிராணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். 

பதிவு செய்வதன் மூலம் ஆன்டோரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பிற ஊசி போன்ற இலவச சேவைகளைப் பெறலாம்

ஒரு கால்நடை மருத்துவர் பதிவு செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று செல்லப்பிராணியை பரிசோதிப்பார். ஏழு நாட்களுக்குள் செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும் என்றும்

தற்போது வரை நாய், பூனை ஆகியவை மட்டுமே செல்லப்பிராணிகளாக இத்திட்டத்திற்குள் வரையறுத்துள்ளதாகவும், தொடர்ந்து வேறு ஏதாவது பிராணிகளையும் இத்திட்டத்தில் இணைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று மேயர் அவர்கள் கூறினார்.

கட்டாயம் தங்கள் செல்லப்பிராணிக்கு வெறிநாய்க் கடிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்கண்ட செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களுக்கு சென்று உங்கள் செல்லப்பிராணிக்கு இலவசமாக வெறிநாய்க் கடிநோய் தடுப்பூசி செலுத்திய பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  1. திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பல்லவன் சாலை, 14வது தெரு, திரு.வி.க. நகர், சென்னை - 11. கோட்டம் - 68, மண்டலம் – 6 

2. நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், பள்ளி தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 34. கோட்டம் – 110, மண்டலம் –9 

3. கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், முத்துரங்கன் தெரு, கண்ணம்மாப்பேட்டை, சென்னை –17. கோட்டம் – 141, மண்டலம் –10 

4. மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், நேரு நெடுஞ்சாலை, மீனம்பாக்கம், சென்னை. 116. கோட்டம் – 166, மண்டலம் –12

ஆன்லைனில் தாங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் , 2MB அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணப்பித்த பிறகு உரிம கட்டணமாக ரூ.50/-ஐ இந்த முறைகள் Debit Card, Credit Card, UPI, மற்றும் Net Banking முறையில் செலுத்தப்பட வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க:-

https://chennaicorporation.gov.in/gcc/online-services/

http://117.232.67.158:8061/login

Give Us Your Feedback