Breaking News

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0
பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி வயது 27 இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார். 

இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் காசி மீது போக்சோ வழக்கு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார் அதன்பின்பு வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback