Breaking News

சென்னையில் இருந்து புறப்பட்டது ஹஜ் பயணிகள் முதல் குழு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழு சென்னையிலிருந்து இன்று தனி சிறப்பு விமானங்களில் ஜெட்டா புறப்பட்டது. 



உலகமெங்கும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக, ஒவ்வொரு இஸ்லாமியரும் சவுதி அரேபியா, ஜெட்டா நகரின் அருகிலுள்ள மதினா, மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.

தமிழகத்தில் அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில், விமானத்தில் பயணிக்க 2 தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு விமானங்கள் வரும் 21-ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. 

இந்த விமானங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 11.20 மணியளவில் ஜெட்டா நகருக்கு முதல் தனி சிறப்பு விமானம் புறப்பட்டது. இதில் 254 ஹஜ் யாத்ரிகர்கள் பயணம் செய்தனர்.இதைத் தொடர்ந்து, 2-வது சிறப்பு விமானம் மதியம் 12.10 மணியளவில் கிளம்பியது. இதில் 150 ஹஜ் யாத்ரிகர்கள் சென்றனர். இவர்கள் ஹஜ் யாத்திரை முடிந்து, வரும் ஜூலை முதல் வாரத்தில் இதே போல் தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர்.

ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழுவினரை சென்னை சர்வதேச விமான நிலையத்தில், மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback