இந்திய ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் படிக்க விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 220 பி.எஸ்சி நர்சிங் 4 வருட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இதற்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியின் 2023 ம் ஆண்டின் பிஎஸ்சி செவிலியர் சேர்க்கைக்கு விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் கொண்ட பெண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் இராணுவ நர்சிங் சேவைகள் இப்போது B.Sc நர்சிங் படிப்பு 2023 க்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றன. இந்திய குடிமக்கள் இந்திய இராணுவத்தில் சேரவும், தொழிலைத் தொடரவும் இந்த பாடத்திட்டம் வாய்ப்பளிக்கிறது.எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வி தகுதி:-
12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவிகள், இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் சேரலாம்.
இந்த படிப்புகளில் சேர கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அல்லது
ஆதரவற்ற விதவை (அ) விவகாரத்து செய்தவர்/ சட்டரீதியாக பிரிந்து வாழும் பெண்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
NEET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்திய இராணுவ B.Sc நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச உயரம் 153 தேவை
வயது வரம்பு:-
1998 அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகும், 2006 செப்டமபர் 30ம் தேதிக்கு முன்னதாகவும் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
எழுத்துத் தேர்வு:-
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும், இது சம்பந்தப்பட்ட பாடங்களில் அவர்களின் அறிவு மற்றும் திறமையை மதிப்பிடுகிறது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள்,செவிலியர் தொழிலுக்குத் தேவையான மருத்துவத் தரங்களைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக விரிவான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நேர்காணல்:-
எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரீட்சை ஆகியவற்றிலிருந்து பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், அங்கு அவர்கள் தொடர்பு திறன், ஆளுமை மற்றும் நர்சிங் படிப்புக்கான தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.
இந்திய ராணுவத்தின் B.Sc நர்சிங் சேர்க்கை 2023 க்கு விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் B.Sc நர்சிங் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் UR/OBC/EWS விண்ணப்பதாரர்கள் : ரூ. 200SC/ST விண்ணப்பதாரர்கள்: இல்லை (கட்டணம் இல்லை)UR/OBC/EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200, அதேசமயம் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: கல்வி செய்திகள்