Breaking News

நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு 2 பேர் கைது நீச்சல் குளத்திற்கு சீல்

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு  2 பேரை கைது 



ஸ்ரீபெரும்புதூர் அருகே நீலமங்கலத்தில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் மூழ்கி ஆறு வயது சிறுவன் புதன்கிழமை மாலை உயிரிழந்தான். உயிரிழந்தவர் நீலமங்கலத்தைச் சேர்ந்த சஷ்வின் வைபவ் (6) என்பதும், அவர் 1ஆம் வகுப்பு படித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் நீலமங்கலத்தை சேர்ந் த நந்தகுமார்- தாரிகா தம்பதியினருக்கு சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2).  இரண்டு பிள்ளைகள் அதில்  சஸ்வின் வைபவ் ஒன்றாம் வகுப்பு படித்த இவர் கோடை விடுமுறையை ஒட்டி நீலமங்கலத்தில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிக்கு சேர்த்துள்ளனர். அங்கு புதன்கிழமை நீச்சல் பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றார். பின்னர் தனது இளைய மகனுக்கு உணவு கொடுப்பதற்காக தாரிகா சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது சஸ்வின் வைபவ்வை காணவில்லை. அப்போது நீச்சல் குளத்தில் தன்னுடைய மகன் மூழ்கி கிடப்பதை பார்த்த தாரிகா அலறி துடித்தார். நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனை உடனடியாக சிறுவனை மீட்டு காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கியதாக நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

குன்றத்தூர் தாசில்தார் மற்றும் கிராம அலுவலர் தலைமையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது.மேலும், நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக நீச்சல் குளத்தின் உரிமையாளர் நாகராஜன், அவரது மகன் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback