Breaking News

சவுதி ,ஓமானில் பார்க்கப்பட்ட துல் ஹஜ் மாத பிறை ஜூன் 28 ம்தேதி 'ஈத் அல் அதா' கொண்டாடப்படும் என அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை  ஞாயிற்றுக்கிழமை இரவு சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. 



எனவே இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் கடைசி மாதமான துல் ஹஜ், நாளை ஜூன் 19 திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது.  அதன்படி, வரும் ஜூன் 27, செவ்வாய்க் கிழமை அரஃபா நாள் தினமாகவும், அதற்கு அடுத்த நாள் ஜூன் 28, புதன்கிழமை அன்று ஈத் அல் அதா பெருநாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஓமானில் இருக்கக்கூடிய இஸ்லாமிய அறநிலையத்துறை மற்றும் மத விவகார அமைச்சகம் (MERA) இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறையை பார்த்ததாக அறிவித்துள்ளது. 

தியாகத் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள், 'ஹஜ்' செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும் ஹஜ் செய்வது என்பது, புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. 

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback