Breaking News

விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து 2 நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட அசாம் இளைஞர்

அட்மின் மீடியா
0
கொல்கத்தாவில் இருந்து 02.06.2023 அன்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் - 12842 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹானாகா ரயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் இரவு 7 மணியளவில் ரயில் வந்து கொண்டிருந்த போது,கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு, சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதுஅதன்பின்பு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதியது இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள 6 பெட்டிகள் நசுங்கி ஒன்றின் மீது ஒன்று மோதியுள்ளது இந்த விபத்தில் இதுவரை சுமார் 275  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் முடிவடைந்து ரயில் பாதை சீரமைக்கப்பட்டு ரயிலும் விடப்பட்டுள்ளது
 
 

அதிசயம்:-

இந்நிலையில் நேற்று மாலை  சுமார் 6 மணியளவில் உருக்குலைந்து கிடந்த ரயில் பாகங்களில் இருந்து முனகல் குரலைக் கேட்டுள்ளார் அங்கிருந்த போலீஸ் பணியாளர் அதன்பின்பு குரலை கேட்டு அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் நொறுங்கிக் கிடந்த ரயிலுக்கு அடியில் இருந்துள்ளார் உடனடியாக  அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதன்பின்பு விசாரனையில் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் கவுகாத்தியைச் சேர்ந்த 35 வயதான துலால் மசூம்தார் என்பது தெரிய வந்தது

இதுபோன்ற ஒரு ரயில் விபத்து நடந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த போதிலும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை சிறப்பு சிகிச்சைக்காக பாலசோர் மருத்துவமனைக்கு மாற்றினர். 

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் பயணம் செய்தார். எனினும், அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பது தெரியவில்லை.விபத்து நடந்தபோது அவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஜெனரல் பெட்டியில் இருந்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback