Breaking News

வாட்ஸப் புதிய 13 அப்டேட்கள் முழு விவரம் new update in whatsapp

அட்மின் மீடியா
0

வாட்ஸப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகின்றது அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்  தனது பீட்டா பயனாளர்களுக்கு வழங்கி உள்ளது, மேலும் வெகு விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது




மீடியா பிக்கர் வசதி

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது பயனர்களின் வசதிக்காக மீடியா பிக்கர் என்கிற வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.

வாட்ஸப்பில் மீடியா பகுதியை கிளிக் செய்தால் வரிசையாக புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் காட்டப்படும் ஆனால் இனி நாம் தேர்வு செய்யும் போது  அந்த புகைப்படம், வீடியோ குறித்தான அனைத்து தகவலும் காண்பிக்கப்படும்

வீடியோ கால் ஸ்கிரீன் ஷேரிங்

வாட்ஸப் வீடியோ அழைப்பின் போது ஷேரிங் வசதியில் அனைவருடனும் பகிர அனுமதிக்கும்.இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது, பயனர்களின் திரையில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் - அறிவிப்புகள் உட்பட - படம்பிடிக்கப்பட்டு வீடியோ அழைப்பில் இணைக்கப்பட்டவர்களுடன் பகிரப்படும். 

சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ் 

வாட்ஸப்பில் நாம் சேமித்து வைத்திருக்கும் தொடர்பு எண்கள் தவிர வேறு யாராவது வாட்ஸ்அப்பில் அழைத்தால் அது நமக்கு தொந்தரவை ஏற்படுத்தாதவாறு அதனை நாம் சைலன்ஸ் மோடில் வைத்துக்கொள்ளலாம். 

வீடியோ மெசஜ் 

தற்போது வாட்ஸப்பில் நாம் ஒரு மெசேஜ்ன் ஐ டைப் செய்து அனுப்பலாம் அல்லது ஆடியோ மெசேஜ்களை அனுப்பலாம்

இனி ஆடியோ மெசஜ் போல் வீடியோ மெசேஜ் ஷேர் செய்யும் வசதியை கொடுக்க வாட்ஸ்அப் பீட்டா வெர்சன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

வாட்ஸ் அப்பில் வீடியோ செய்தியை அனுப்ப வாட்ஸப் சேட் செல்ல வேண்டும். 

அடுத்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் பாக்ஸின் வலதுபுறத்தில் உள்ள கேமரா பட்டனை அழுத்தவும்

அடுத்து அதில் கேமரா பட்டனை வீடியோ பட்டனாக மாற்ற ஆப்ஷன் கேட்கும். 

அதனை பயன்படுத்தி குறுகிய வீடியோ செய்திகளை அனுப்பத் தொடங்கலாம். 

இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்

யூசர்-நேம் வசதி:-

வாட்ஸப்பில் நாம் வழக்கமாக பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணை பயன்படுத்தாமல் இனி இந்த யூசர்-நேமை (Username) பயன்படுத்தலாம். இனி எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் அவர்கள் விரும்பும் தனி பயனர் பெயர்களை கொண்டு தங்களை தனித்து அடையாளம் காண்பித்துக் கொள்ளலாம்.இதேபோன்ற அம்சத்தை அடிப்படையாக கொண்டு டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸப் எடிட் வசதி:-

வாட்ஸ் அப்பில்  நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளதன்அதன்படி வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ்அப் நிறுவனம் செய்தியை எடிட் செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்

புகைப்படங்களை ஸ்டிக்கராக மாற்றும் வசதி:-

வாட்ஸ் ஆப் சேட்டிங் போது ஸ்டிக்கர்களை அனுப்ப வாட்சப்பில் நாம் மூன்றாம் தர ஆப்கள டவுன்லோடு செய்து எடிட் செய்து தான் நாம் அனுப்பமுடியும் 

தற்போது வாட்ஸப்பில் தங்கள் புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக உருவாக்க முடியும். ஒரு வாட்ஸ்அப் பயனர் ஒரு படத்தைத் தேர்வு செய்து  நீங்கள் ஸ்டிக்கரை உருவாக்க விரும்பும் புகைப்படத்தைப் பதிவேற்றவும்

டெஸ்க்டாப்பில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு இந்தப் புதிய கருவி உதவும். யாராவது டிஜிட்டல் கலைஞராக இருந்தால் அல்லது விரல்களுக்குப் பதிலாக சுட்டியைக் கொண்டு படங்களைத் திருத்த விரும்பினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சாட் லாக் வசதி:-

வாட்ஸ் ஆப்பில் 'சாட் லாக்' என்ற வசதி அறிமுகம்; இந்த அம்சத்தின் மூலம் லாக் செய்யப்பட்ட சாட்களை பாஸ்வேர்டு அல்லது கைரேகை பதிவு செய்யாமல் மற்ற யாரும் பார்க்க முடியாது இந்த புதிய சாட் லாக் அம்சத்தின் மூலம் வாட்ஸப் ஓப்பன் செய்யலாம் ஆனால் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பயன்படுத்தி லாக் செய்ய முடியும். இதன் மூலம் நாம் முழு வாட்ஸ்அப்பையும் லாக் செய்யும் இதனால் லாக் செய்யப்படும் உரையாடல்கள் தனியாக குறிப்பிடப்படுவதோடு நோட்டிபிகேஷனில் லாக் செய்யப்பட்ட பெயரையும் அதில் வந்திருக்கும் செய்தியையும் வெளிப்படையாக காண்பிப்பதில்லை. மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பயோமெட்ரிக்ஸ் அல்லது கடவுச்சொல் பயன்படுத்தி  அம்சம் இருந்தாலும், இந்த புதிய அம்சம் குறிப்பிட்ட தனிப்பட்ட செய்திகளை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் போனை யாராவது பார்த்தாலும் லாக் செய்யப்பட்ட செய்திகள் ரகசியமாகவே இருக்கும்.

அட்மின் அனுமதி தந்தால் மட்டுமே குருப்பில் இணைய முடியும்

தற்போது வாட்ஸப் குருப்பில் இணைய பலரும் குருப் லின்ங் ஷேர் செய்கின்றார்கள் அதில் நாம் நினைத்தால் சேரலாம் அல்லது விலகி கொள்ளலாம்

ஆனால் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அப்டேப் படி  புதிதாக ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். 

குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட அந்த குரூப் அட்மின் அனுமதி தந்தால் தான் நீங்கள் அந்த குருப்பில் இணைய முடியும் வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அட்மின் தனது குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் யாரை இனைக்கவேண்டும் என அவரை மட்டும் இணைக்கலாம் இதனால் குருப் அட்மினுக்கு அதிகாரம் வளுப்பெற்றுள்ளது

புதிதாக ஒருவர் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட குரூப் அட்மின் அனுமதி வேண்டும் என்ற வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி:-

முதலில் எந்த குருப்பிற்க்கு செட் செய்யவேண்டுமோ அந்த குருப் செல்லுங்கள் 

அடுத்து அதில் உள்ள குரூப் செட்டிங் கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் புதிதாக உள்ள  ‘Approve New Participants’ என்ற அம்சம் இருக்கும். அதை ஆன் செய்யுங்கள். 

 Voice Message  Status ஆக வைக்கும் வசதி

வாட்ஸப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகின்றது அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்  ஆடியோவை ஸ்டேட்டசாக வைக்கும் அம்சத்தை தனது பயனாளர்களுக்கு வழங்கி உள்ளது, 

வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்களது குரல் பதிவை 30 வினாடிகள் வைக்கும் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம்.

இந்த தகவலை வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அம்சத்தில் சில அற்புதமான புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். அது எப்படி இருக்கிறது, என்று சொல்லுங்கள். இப்போது நீங்கள் சிரமமின்றி உங்கள் குரல்களை பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரலாம் என்று வாட்ஸ்அப் ட்வீட் செய்துள்ளது.

வாட்சப் பயனர்கள் இந்த புதிய அம்சத்தை ஸ்டேட்டஸ் பிரிவின் டெக்ஸ்ட் பகுதியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை பெற உங்கள் மொபைலில் பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள்

அடுத்து உங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் சென்று ஆடியோவை ஸ்டேட்சாக வைத்து கொள்ளுங்கள்

வாய்ஸ் மெசஜையும் ஒரு முறை மட்டுமே கேட்கும் படி View Once 

அதாவது நாம எப்படி ஒரு நபருக்கு புகைப்படம் அனுப்பும் போது View Once முறையில் அனுப்புகின்றோமோ அதேபோல் இனி ஆடியோ மெசஜையும் ஒரு முறை மட்டுமே கேட்கும் முறையில் அப்டேட் செய்யும் பணி நடைமுறைக்கு வர உள்ளது என அறிவித்துள்ளார்கள்

இந்த புதிய அப்டேட் வந்துச்சுனா நீங்க View Once முறைல உங்களோட ஆடியோவும் மற்றவர்களுக்கு ஷேர்பண்ணிக்கலாம் அவர்கள் ஒரு முறை மட்டும் தான் அதை கேக்க முடியும், மேலும் நீங்கள் அனுப்பும் அந்த ஆடியோவை அவர்கள் Record அல்லது Download என்று எதும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது சோதை முறையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

View Once முறை என்றால் என்ன:-

வியூ ஒன்ஸ் (View Once) எனப்படுவது வாட்ஸப்பில் ஒரு முறை மட்டுமே காணும் வகைஆகும்

வாட்ஸப்பில் நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் புகைப்படங்களை  அதன்  பெருநரால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதன் பிறகு, அவை தானாகவே பெறுநரின் சாட்டில் இருந்து நீக்கப்படும் இந்த வசதி தற்போது ஆடியோவிற்க்கு வர உள்ளது

ஆடியோவை ஸ்டேட்டஸாக வைக்கலாம்

வாட்ஸப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகின்றது அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்  ஆடியோவை ஸ்டேட்டசாக வைக்கும் அம்சத்தை தனது பயனாளர்களுக்கு வழங்கி உள்ளது, மேலும் வெகு விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது

வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்களது குரல் பதிவை 30 வினாடிகள் வைக்கும் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம்.இந்த தகவலை வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அம்சத்தில் சில அற்புதமான புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். அது எப்படி இருக்கிறது, என்று சொல்லுங்கள். இப்போது நீங்கள் சிரமமின்றி உங்கள் குரல்களை பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரலாம் என்று வாட்ஸ்அப் ட்வீட் செய்துள்ளது.

வாட்சப் பயனர்கள் இந்த புதிய அம்சத்தை ஸ்டேட்டஸ் பிரிவின் டெக்ஸ்ட் பகுதியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback