Breaking News

10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு sslc hall ticket

அட்மின் மீடியா
0

10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 

 


10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது.

10, 11 ,12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மே 23 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து 10 மற்றும் 11 ,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback