Breaking News

ரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் SSC Free Coaching

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி ஆகிய தேர்வுகளுக்கான 2023ம் ஆண்டின் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது.அதற்க்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்



ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு

'நான் முதல்வன்' திட்டமானது மாண்புமிகு தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாகும். அதன் கீழ், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் வெற்றிபெற, பயிற்சி செலுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது. மற்றும் பிற தேவையான உதவிகளை வழங்குவதில் சிறப்பு கவனம் 

ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு" என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமாகும். இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் திட்டத்தின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். 

இப்பயிற்சி திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 விண்ணப்பதாரர்களை ஏற்கின்றது . 

150 க்கும் மேல் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், 10- ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் . தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி & வயது வரம்பு..குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து அதிகபட்சமாக 35 வயதுடையவராக இருக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX இந்த லின்ங்கை கிளிக் செய்யவும்

அடுத்து அதில் உங்களது சுய குறிப்பு விவரங்கள் மற்றும் கல்வி தகுதி, மதிப்பெண் விவரங்களை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ் விவரங்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யுங்கள்

அடுத்தாக விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.

விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்:- 11.05.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.05.2023

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு:- 23.05.2023

வகுப்புகள் துவங்கும் நாள்:- 25.05.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification.pdf

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback