Breaking News

ரேஷன் கடைகளில் இனி QR CODE மூலம் பணம் செலுத்தலாம்!! முழு விவரம்

அட்மின் மீடியா
0

QR CODE மூலம் இனி ரேஷன் கடைகளில் பணம் செலுத்தலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் குறைந்தவிலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

அதற்க்காக நாம் ரேசன்கடைக்கு பணம் எடுத்து சென்று வாங்குவோம் ,சில ரேஷன் கடைகளில் சில்லரை தட்டுப்பாடு, மீதி பணத்திற்கு வேறு பொருள் வாங்குவது, அல்லது மீதி சில்லறைக்காக காத்திருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கும், தற்போது பொது மக்களின் வசதிக்காக ரேஷன் கடையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரேசன் கடையில் நாம் வாங்கிய பொருட்களுக்கு கியூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் தற்போது முதன் முறையாக காஞ்சிபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கியூ ஆர் கோடு நடைமுறை கொண்டுவரப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback