Breaking News

இனி மொபைல் போன் தொலைந்துவிட்டால் ஐஎம்இஐ நம்பர் வைத்து ஈசியா கண்டுபிடிக்கலாம்

அட்மின் மீடியா
0

மொபைல் போன் தொலைத்து விட்டால் அல்லது அது திருடு போனால் அதனை கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமாகும் அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. 

ஆனால், இனி நம்முடைய போன் தொலைந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி Sanchar Sathi என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

International Mobile Equipment Identity சர்வதேச மொபைல் கருவி அடையாள எண் ஆகும்.இது உங்களின் மொபைல் போனின் ஐஎம்இஐ நம்பர் ஆகும்

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் இந்தியா முழுவதும் தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களின் 15 இலக்க ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு அந்த போன் எங்கு இருக்கிறது என எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். 

மேலும் சிறப்பம்சமாக அந்த மொபைல் போனை யாரும் பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback