டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீராங்கனைகள் சிரித்தபடி எடுத்த செல்பி என பரவும் புகைப்படம் உண்மை என்ன
டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீராங்கனைகள் சிரித்தபடி எடிட் செய்து சிலர் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பாலியல் புகார்:-
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுக்களை முன்வைத்தும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கு பதிவு:-
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னரே பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
போராட்டம்:-
பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.அப்போது மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்து நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர்
ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் தொடர்பாக மல்யுத்த வீரர்களின் போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பலர் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பொய் புகைப்படம்:-
அப்போது விளையாட்டு வீராங்கனை ஒரு புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.ஆனால், அந்த புகைப்படத்தை சிலர் மாற்றி, தொழில்நுட்ப உதவியுடன் அந்த புகைப்படத்தில் வீராங்கனைகள் சிரித்தபடி இருக்குமாறு தவறாக எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கருத்துபதிவிட்டுள்ளார்.அதில், ஒன்று எடிட்டிங் செய்யப்பட்ட போலியான புகைப்படம் மற்றும் மற்றொன்று உண்மையானது. உண்மையாக அந்த போட்டோவில் இருப்பவர் சங்கீதா போகட் மற்றும் வினேஷ் போகட். அவர்கள் உண்மையில் சிரிக்கவில்லை. இருப்பினும், சிலர் அதனை மாற்றி சிரிப்பது போல காட்டபட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.
Tags: FACT CHECK இந்திய செய்திகள்