Breaking News

திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஹிஜாப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகியை கண்டித்து சாலை மறியல்

அட்மின் மீடியா
0

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் ஜன்னத். இந்த மருத்துவமனையில் கடந்த புதன் கிழமை இரவு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக் கூடாது என்று  மிரட்டியதோடு ஹிஜாப்பை கழற்ற வேண்டும் எனவும் கூறி மருத்துவரை பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது 

நாகை மாவட்டத்தில் ஹிஜாபை கழட்ட சொல்லி பாஜக நிர்வாகி மிரட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி , மனிதநேய மக்கள் கட்சி , மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர ராம் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை பிடிக்க உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback