Breaking News

வாட்ஸ் ஆப்பில் தெரியாத வெளிநாட்டு எண்ணில் இருந்து வீடியோ கால் வருகிறதா எச்சரிக்கையாக இருங்க முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வெளிநாட்டு எண்களில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால், உஷாராக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள்



தற்போது பலருக்கும் வாட்ஸ் ஆப்பில் அவர்களுக்கு சம்மந்தம் இல்லாத எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) போன்ற நாடுகளின் எண்ணில் இருந்து மெசஜ் அல்லது வீடியோகால் வருகின்றன.

அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளார்கள்

வாட்ஸப்பில் பகுதி நேர வேலைவாய்ப்பு என கூறுகின்றனர்.மோசடியில் சிக்க வைக்க முதலில் உங்களின் ஆசையை தூண்டுவார்கள். இதற்காக எளியவேலையை கொடுத்து சிறிய தொகையை அனுப்பி வைப்பர். இதனை நம்பி, வேலை செய்யும் போது உங்கள் விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுவர்.

டிவிட்டரில் ஏராளமானோர் இதுபோன்று வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப் அழைப்புகள் வருவதாக பகிர்ந்திருந்தனர். 

அதில் உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 3 முறை மிஸ்டு கால் வந்துள்ளதா. அனைத்து கால்களும் ஒரு முறை மட்டுமே ரிங் ஆகும். அந்த எண்ணின் புரோபைல் படத்தில் பெண்கள் முகம் இருக்கும்.இதுபோன்ற அழைப்புகள் வருமாயின், மோசடி பேர்வழிகள் உங்களுக்கு வலைவிரிக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்' என பதிவிட்டிருந்தார். 

வாட்ஸ் ஆப் மோசடியில் இருந்து தப்பிக்க, ஒரே வழி மோசடி வாட்ஸ் ஆப் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி, நாம் அவர்களை தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். இது தவிர, இதுபோன்ற வெளிநாட்டு எண் அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் அதனை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback