Breaking News

வீட்டின் கூரை மீது விழுந்து நொறுங்கிய ரானுவ விமானம்!! 2 பேர் பலி!! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்ததாகவும், பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்

 


விபத்துக்குள்ளான மிக்-21 போர் விமானம் சூரத்கரில் இருந்து புறப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.மிக்-21 போர் விமான விபத்தில், விமானத்தை ஓட்டிவந்த விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மிக்-21 போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் இன்று காலை சூரத்கரிலிருந்து புறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் பொதுக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/ANI/status/1655439620098899968

Give Us Your Feedback