Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்கள் அரசு திரைப்பட கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 மே 11-ம் தேதிமுதல் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் ஜூன் 2 கடைசி நாள்



இது தொடர்பாக தமிழக அரசு  வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இங்கு இயக்கம் மற்றும் திரைக் கதை எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, டிஜிட் டல் இன்டர்மீடியேட், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகளில் 2023-24-ம் கல்வி ஆண்டில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்

ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதற்கான விண்ணப் பத்தை பின்வரும் இணையதளங் களில் மே 11 முதல் 31 வரை பதி விறக்கம் செய்துகொள்ளலாம்.

www.tn.gov.in. www.dipr.tn.gov.in

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்தை “முதல்வர், அரசு எம்ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை 600113” என்ற முகவரிக்கு தபால் மூலமாக ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடி யாக வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


1. இளங்கலை - காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)

2. இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)

6. இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) - Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் www.tn.gov.in எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம் என்றும் 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் 02. 06.2023 அன்று மாலை 5 மணிக்குள் 

முதல்வர் (பொ), 
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், 
தரமணி, 
சென்னை – 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

மேலும், மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback