Breaking News

120 அடி கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக மாட்டிக் கொண்ட முதியவர்!! மீட்பு வீடியோ

அட்மின் மீடியா
0

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மடுகரை பகுதியில் அவர் நடந்துசென்றபோது எதிர்பாராதவிதமாக 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணறு இருந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் அவர் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. 

கோப்பு படம் கூகுள்

இப்படி மூன்று நாட்களாக கிணற்றுக்குள் தவித்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் முதியவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மடுகரை தீயணைப்பு வீரர்களும் கிராம மக்களும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அவரை மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். மூன்று நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=vB5nPDCqb5c

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback