தமிழக சிறைத்துறையில் உதவி ஜெயிலர் வேலை வாய்ப்பு TNPSC அறிவிப்பு.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் TNPSC Assistant Jailor Recruitment 2023 | tnpsc notification 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 59 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவி ஜெயிலர் பணிக்கான தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 11.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்
Advertisement No.: 657
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 12.04.2023
பணி:-
உதவி ஜெயிலர் Assistant Jailor
காலியிடங்கள்:-
59 (ஆண்- 54, பெண் – 5)
சம்பளம்:-
உதவி ஜெயிலர் (ASSISTANT JAILOR) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வித்தகுதி:-
10 + 2 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
பொது பிரிவு விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்:-
01.07.2023 அன்று காலை 9.30 மணி அளவில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் நடைபெறும்.
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
திருச்சி
நாகர்கோயில்
உதகமண்டலம்
புதுக்கோட்டை
சிதம்பரம்
திருநெல்வேலி
ராமநாதபுரம்
சேலம்
காரைக்குடி
தஞ்சாவூர்
வேலூர்
காஞ்சிபுரம்
தேவையான சான்றிதழ்கள்:-
10 ம் வகுப்பு சான்றிதழ்
12 ம் வகுப்பு சான்றிதழ்
பட்டபடிப்பு சான்றிதழ்
தற்போதைய புகைப்படம்
ஆதார் கார்டு
தமிழ் வழியில் படித்த சான்று
விண்ணப்பிக்க:-
https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx
தேர்வு செய்யப்படும் முறை:இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை நன்கு படிக்கவும்
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
11.05.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnpsc.gov.in/Document/tamil/09_23_Asst_Jailor_Tam.pdf
https://www.tnpsc.gov.in/Document/english/09_23_Asst_Jailor_ENG.pdf
Tags: வேலைவாய்ப்பு