Breaking News

தமிழகத்தில் பிறை தென்பட்டது நாளை பெருநாள் தமிழக காஜி அறிவிப்பு ramadan 2023 date

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று மாலை ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை  ஷவ்வால் பிறை இன்று பிறை காணப்பட்டதால் ஏப்ரல் 22 சனிக்கிழமை (நாளை) புனிதமிகு ஈதுல் ஃபித்ரு பெருநாள் தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக காஜி அறிவித்துள்ளார்

 


பிறை தேட வேண்டிய நாளான 21.04.2023 வெள்ளிக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் பல இடங்களில்  பிறை தென்பட்டதால் 22.04.2023 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 22.04.2023 சனிக்கிழமை நோன்புப் பெருநாள்  என்பதையும்  தெரியப்படுத்திக் கொள்கிறோம் என தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது

ஷரியத் அறிவிப்பு

ஹிஜ்ரி 1444 ரமலான் மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை  பிறை நாகூர் மற்றும் பல்வேறு இடங்களில் காணப்பட்டது.

ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 22-04-2023 தேதி அன்று ஷாவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

 

பள்ளிக்கு செல்லும் முன்:-

பெருநாள் செல்லுவதற்கு முன் நல்ல முறையில் குளித்து விட்டு நம்மிடம் உள்ள சிறந்த ஆடைகளை அணித்து கொள்ள வேண்டும்!

கட்டாயமாக ஸதகதுல் ஃபித்ரை தொழுகைக்கு முன் கொடுத்து விட வேண்டும்! தொழுகை பின்னால் கொடுத்தால் அது தர்மம் ஆகி விடும்! 

தொழுகைக்கு செல்லும் முன் உணவு உண்ண வேண்டும் அல்லது சில பேரித்தம் பழமாவது உண்ண வேண்டும்!

பெருநாள் தொழுகை செல்லும் போது ஒரு பாதை! தொழுகை முடித்து திரும்பவும் போது ஒரு பாதையில் வர வேண்டும்!

பெருநாள் தக்பீர்:-

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், 

லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து

பொருள்:-

அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாருமில்லை. இன்னும் அல்லாஹ் மிகப் பெரியவன், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது




Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback