Breaking News

ஆதிக் அகமதுவை சுட்டு கொன்றது ஏன் கொலையாளிகள் வாக்குமூலம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது. அவரின் சகோதரர் அஷ்ரஃப் இருவரும் போலிஸ் பாதுக்காப்புடன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இரண்டு தினங்களுக்கு முன்னர் அதிக் அகமதின் மகன் ஆசாத் அகமது ஜான்சி நகரில் காவல்துறையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

image source twitter


ஆதிக் அகமது

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் எம்.பியாக இருந்தவர் ஆதிக் அகமது. 1989, 1991, 1993, 1996, 2002 என தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார், 2004ல் புல்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார், 

அதில் மூன்று முறை சுயேட்சையாகவும், ஒருமுறை சமாஜ்வாதி கட்சியிலும், ஒருமுறை அப்னா தள் கட்சியிலும் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

இவர் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் வழக்கறிஞர் உமேஷ் பால் ஆகியோரது கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியாக கருதப்படும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது நூற்றுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

வழக்கில் அகமதாபாத் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், கடந்த செவ்வாய் கிழமை அன்று மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மகன் என்கவுண்டர்:- 

புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பியாக இருந்தார்.உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் அகமதுவின் மகன் ஆசாத் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். 

இந்நிலையில் சிறப்பு அதிரடி படையினரின் தேடுதல் வேட்டையில் சமீபத்தில் தான் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதையடுத்து இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு அதிக் அகமது மீண்டும் சிறைக்கு திரும்பினார். 

துப்பாக்கி சூடு:-

இந்நிலையில் நேற்றிரவு, மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது இருவரும் போலீஸார் முன்னிலையிலேயே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அருகில் போலீஸார் இருக்க , செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது  செய்தியாளர்களை போல கைகளில் மைக், ஐடி கார்டு மற்றும் கேமராவுடன் வந்த மர்ம நபர்கள் மூவர் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர். அப்போது அவரது சகோதரர் அஷ்ரப்பும் உடனிருந்தார். அவரும் சுட்டு கொல்லப்பட்டார்

மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அருகே வந்த போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளிக்க அதிக் அகமது ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்கள்

இருவரும் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. 

144 தடை :-

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உ.பியின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பணி நீக்கம்:-

ஆத்திக் அகமது கொலை சம்பவத்தில் ஆத்திக் அகமதுக்கு பாதுகாப்பு இருந்த 17 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்

மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இரட்டைக் கொலை குறித்து விசாரிக்க உத்தரவு

வைரல் வீடியோ:-

மருத்துவ பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்தபோது ஊடகத்தினரிடம் பேட்டி வழங்கிக்கொண்டு செல்லும்போதே 3 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன

வீடியோ பார்க்க:-

https://bit.ly/3MNJ12P

பிடிபட்ட 3  குற்றவாளிகள் 

அதிக் அகமது மற்றும் அவரது இளைய சகோதரர் காலித் அசிம் என்ற அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொன்றுவிட்டு போலிசார் முன்பே அவர்கள் 3 பேரும் சரணடைந்தார்கள்  போலிசார் விசாரனையில் பண்டா பகுதியை சேர்ந்த லாவ்லேஷ் திவாரி, கஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்த அருண் மவுரியா மற்றும் ஹமீர்பூரைச் சேர்ந்த சன்னி சிங் என அடையாளம் கண்டுள்ளனர். 

கொலை செய்தது ஏன் :-

நாங்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தான் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப்பை கொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர். 

மேலும் அவர்கள் கொலை செய்யும் நோக்கத்துக்காக தங்களை பத்திரிகையாளர்கள் போல் காட்டிக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தெரியவந்துள்ளது. என விசாரணையின் போது போலீஸாரிடம் கூறியதாக FIR இல் குறிப்பிடப்பட்டுள்ளது, 

சிறையில் அடைப்பு:-

கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback