Breaking News

தமிழக மக்களே தயாரா சென்னை தி.நகரில் இந்தியாவின் நீளமான ஆகாய நடைபாதை முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை - தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதையாக தயார் செய்யப்பட்டுள்ளது



சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேம்பாலங்கள் அழகுபடுத்துதல், புதிய மேம்பாலங்கள் அமைத்தல், பூங்காக்களை சீரமைத்தல், நீரூற்றுகள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது அதில் சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் பகுதியாக தி.நகரில் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. தற்போது பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாலத்தின் சிறப்பம்சங்கள்:-

தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டு வருகின்றது

இந்த பாலம் 570 மீட்டர் நீளம் (சுமார் 1/2 கிலோமீட்டர்) , 4 மீட்டர் அகலமும் கொண்டது.

பாலம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது

மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்ல சக்கர நாற்காலி வசதி

தூண்களில் அழகான ஓவியங்கள்

தியாகராய நகர் பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டுகள்

தி.நகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் உஸ்மான் சாலையில் லிப்ட் வசதி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback