Breaking News

கோடை விடுமுறைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று முதல் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.கோடைக்கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.


கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்

தாம்பரத்திலில் இருந்து நெல்லைக்கு  ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும்.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3 ஆகிய 11 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய 5 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய 6 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியே மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

தாம்பரத்திலிருந்து மங்களூருக்கு ஏப்.25 முதல் ஜூன் 27 வரை (செவ்வாய்கிழமை தோறும்) பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06031) இயக்கப்படவுள்ளது. 


கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து பெங்களூருக்கு ஏப்.25 முதல் ஜூன் 27 வரை (செவ்வாய்கிழமை தோறும் மாலை 6.05 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06083) இயக்கப்படுகிறது.

பெங்களூரிலிருந்து கொச்சுவேலிக்கு ஏப்.26 முதல் ஜூன் 28 வரை (புதன்கிழமை தோறும்) பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06084) இயக்கப்படுகிறது.இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர்க்கு ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும்.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்க்கு ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயில்  நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் அடையும்.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூர்க்கு மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய 9 நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் ரயிலானது கொல்லம், கோட்டயம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம் வழியாக மறுநாள் மதியம் 12.45 மணிக்கு சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்க்கு மே 4,11,18, 25, ஜூன் 1,8,15, 22, 29 ஆகிய 9 நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்க்கு ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்களில் நெல்லையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

நாகர்கோவிலில் இருந்து  தாம்பரத்திற்க்கு ஏப்ரல் 22, 29 மே 6, 13, 20, 27 ஆகிய 6 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது.

மங்களூரிலிருந்து தாம்பரத்துக்கு ஏப்.26 முதல் ஜூன் 28 வரை (புதன்கிழமை தோறும்) காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Give Us Your Feedback