Breaking News

தமிழக காவல்துறையில் குதிரை பராமரிப்பாளர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

குதிரை பராமரிப்பாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. 



குதிரை பராமரிப்பாளர் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் 

பதவியின் பெயர் :-

குதிரை பராமரிப்பாளர்



வயது வரம்பு:-

31.03.2023 அன்றுள்ளபடி 18 - 30 க்குள் இருக்க வேண்டும்

பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் :32 வயதிற்க்குள் இருக்கவேண்டும் 

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்: 35 வயதிற்க்குள் இருக்கவேண்டும் 


கல்வி தகுதி:-

 தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-

குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், 

காவல் ஆணையாளர் அலுவலகம், 

சென்னை பெருநகர காவல், 

வேப்பேரி,

சென்னை -7


அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் நாள் மற்றும் இடம்:-

17. 04.2023 நேரம் காலை 07.00 மணி

இடம்: ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், 

ருக்குமணி இலட்சுபதி சாலை ( மார்ஷல் சாலை), 

எழும்பூர், சென்னை-08


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

03.04.2023 மாலை 5.00 மணி

மேலும் விவரங்களுக்கு:-



குதிரை பராமரிப்பாளர்களின் வேலைகள் 

தினமும் காலை 4.30 மணிக்கு அறிக்கை ( Report) செய்ய வேண்டும்.

குதிரைகள் படுத்திருந்த வைக்கோல்களை அகற்ற வேண்டும்

குதிரை லாயத்தை சுத்தம் செய்ய வேண்டும்

குதிரைகளின் சாணங்களை அதற்குரிய இடத்தில் கொண்டு போய் நிரப்ப வேண்டும்

குதிரைகளின் உடம்பிலுள்ள அழுக்குகளை சுத்தம் செய்தல் வேண்டும்

குதிரைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை இடைவெளிவிட்டு தீவணம் வைக்க வேண்டும்

குதிரைகளை கால்நடை மருத்துவமனைக்கு மாதந்தோறும் ஒரு முறையும் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அழைத்து செல்ல வேண்டும். 

குதிரைகளுக்கு அதற்குரிய நேரத்தில் தண்ணீர் காட்ட வேண்டும்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback