துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து தமிழகம் கேரளாவை சேர்ந்த 4 பேர் உட்பட 16 பேர் பலி 9 பேர் காயம் Dubai fire 16 dead and 9 injured in Deira
துபாயில் அல் ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று 15.04.2023 மதியம் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளார்கள்
துபாயின் அல் ராஸ் தேரா பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இக்குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளிலும் குடியிறுப்பு பகுதியிலும் தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயனைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தார்கள், ஆனாலும் இந்த தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள் காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகின்றது. கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததாலயே தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கட்டிடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், கட்டிடத்தில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, மூன்று பாகிஸ்தானிய உறவினர்கள் மற்றும் ஒரு நைஜீரியப் பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் அடர்ந்த கரும் புகை மற்றும் தீப்பிழம்புகள் அபார்ட்மெண்ட் ஜன்னலில் இருந்து குதிப்பதைக் காட்டுகின்றன, அப்போது ஜன்னலில் இருந்து புகை மற்றும் தீ வருகின்றன தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிரேன் கொண்டு வந்து மக்களுக்கு உதவ ஆரம்பித்தனர். அவர்களின் விரைவான நடவடிக்கை பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என பலரும் தெரிவித்துள்ளார்கள்
Tags: வெளிநாட்டு செய்திகள்