Breaking News

சுற்றுலா சிறப்பு அரசு பேருந்து கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.150 மட்டுமே முழு விவரம்

அட்மின் மீடியா
0

கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.150 போதும்: சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டம்

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க 150 ரூபாயில் புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது.தற்போது கோடைக்காலம் என்பதாலும் பள்ளி விடுமுறை விடப்பட்டு பலர் சுற்றுலா செல்லும் காலம் என்பதால் என்பதால் கொடைக்கானலில் பலர் குவியதொடங்குவார்கள் இதற்க்காக அரசு போக்குவரத்து கழகம்  கொடைக்கானலை சுற்றிபார்க்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது , அதன்படி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 

அப்பர் லேக் வியூ, 

மோயர் பாயிண்ட், 

பைன் பாரஸ்ட், 

குணா குகை, 

தூண் பாறை, 

பசுமை பள்ளத்தாக்கு, 

கால்ப் மைதானம்

பாம்பார் ஆறு காட்சி

500 ஆண்டுகள் பழமையான மரம்

கோக்கர்ஸ் வாக்

பிரையண்ட் பூங்கா என 11 இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டு கடைசியாக கொண்டைக்கானல் ஏரி  யில் சுற்றுலா பயணிகளை இறக்கி விடப்படுவார்கள் இந்த சுற்றுலாவிற்க்கு பெரியவர்களுக்கு ரூ.150-யும், சிறியவர்களுக்கு ரூ.75- இடங்களையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback