சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டட 14 வது மாடியில் தீ விபத்து வீடியோ பார்க்க
அட்மின் மீடியா
0
எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது, தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று மாலை 6 மணியளவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் உள்ள எல்இடி பெயர் பலகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 14 வது மாடியின் மேல்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் 14 வது மாடியில் தீவிபத்து ஏற்பட்ட தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளார்கள் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்